பக்கங்கள்

Thursday, July 26, 2012

முகநூல் - ஓர் எச்சரிக்கை


பத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் என கேட்டார் .என்ன என்று கேட்டேன் .அவர் சொன்ன செய்தி என்னை மிக வியப்பில் ஆழ்த்தியது .அருவருப்பாகவும் இருந்தது .இப்படியும் இருக்கின்றாகளே மனிதர்கள் இவர்களை நாம் என்ன செய்வது? 


பேஸ்புக்கில் கொஞ்சம் நட்பு வட்டம் பெரிதாகவும் ஓரளவு படித்தவர்களுக்கு இடையில் நடந்த கதை இது .நல்ல சமூக கருத்துக்களை பதிபவர் அவர் .அவர் பதிவிடும் கருத்துக்ள் நன்றாக இருப்பதால் நண்பர்கள் வட்டம் பெரிதாக ஆகிறது .அடிக்கடி பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதால் நாளடைவில் போன் நம்பர்களை கொடுத்து பரிமாரிக்கொள்கிறார்கள்.அடிக்கடி போனில் பேசிக்கிறாங்க நண்பர்கள் அனைவரும் .இந்த நண்பரோடு சிலர் நேரில் ஒன்றாக கூடி பேசி அரட்டை அடித்து செல்கிறார்கள் .இது போல சந்தித்து பேசுவது அடிக்கடி நடக்கிறது .


இந்த நேரத்தில் இந்த நண்பரின் போனில் இருந்து ஒரு நண்பருக்கு அழைப்பு வருகிறது .நண்பர்தான் பேசுகிறார் என நினைத்து ஹலோ என சொல்கிறார் .எதிர் முனையில் பேசியதோ இவருக்கு அறிமுகம் இல்லாத பெண் குரல் .நண்பர் பதற்றம் அடைந்து நீங்க யார் என கேட்க நான் உங்க நண்பரின் மனைவிதான் பேசுறேன் என சொல்கிறார் .இந்த நண்பர் உங்க கணவர் எங்கே என கேட்க அவர் மனம் சங்கடமாக அறைக்குள் படுத்து இருக்கிறார் .அவருக்கு தெரியாமல் உங்களுக்கு போன் செய்கிறேன் என அந்த சொல்ல இவர் எதற்கு சங்கடம் என கேட்டு இருக்கிறார் .உடனே அந்த பெண் எங்கள் குழந்தைக்கு பள்ளியில் பணம் கட்ட முடியவில்லை .அதனால மனம் சங்கடப்பட்டு வீட்டிலேயே படுத்து இருக்கிறார் என்று சொல்லிவிட்டு போனில் உங்க நம்பரை பார்த்தேன் உங்களால் உதவி செய்ய முடியுமா என கேட்பதற்கு அவருக்கு தெரியாமல் போன் செய்கிறேன் .அவருக்கு தெரிந்தால் என் மீது கோபப்படுவார் என சொல்லி இருக்கிறார் .


நண்பர் அந்த பெண்ணிடம் எவ்வளவு கட்டவேண்டும் என கேட்டு இருக்கிறார் .இருபத்து ஐந்தாயிரம் என அந்த பெண் சொன்னதும் பெரிய தொகையாக இருக்கு என நினைத்துக்கொண்டு சரி பள்ளிக்கு கட்டதானே கேட்க்குறீங்க என கேட்டு இருக்கின்றார் .ஆமாம் என சொன்னவுடன் நண்பர் எந்த பள்ளி என கேட்டதற்கு அந்த பெண் ஒரு பள்ளியை சொல்லி இருக்கின்றார் .சரி நான் நாளைக்கு பணம் வாங்கிக்கொண்டு அந்த பள்ளிக்கு வருகிறேன் நீங்களும் வந்துவிடுங்க கட்டுவோம் என சொன்னதுக்கு பள்ளிக்கு நீங்க வரவேண்டாம் யாரவது பார்த்தால் தவறாக நினைப்பார்கள் என சொல்லி இருக்கின்றார் .சரி நான் உள்ளே வரவில்லை பள்ளிக்கு வெளியில் வைத்து பணம் தருகிறேன் நீங்க உள்ளே போய் கட்டிவிட்டு வாருங்கள் என சொன்னதுக்கும் வேண்டாம் நீங்க வெளியில் வேறு எங்காவது வைத்து கொடுங்கள் என சொல்லி இருக்கிறார் .சரி நான் நாளைக்கு பணம் வந்தவுடன் போன் செய்கிறேன் என சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.


நண்பர் அலைபேசியை துண்டித்தவுடன் தனது வேறு ஒரு நண்பருக்கு போன் செய்து நடந்த விசயத்தை சொல்லி இருக்கிறார் .அங்கே அவருக்கு நண்பர் ஒரு அதிர்ச்சியான விசயத்தை சொல்லி இருக்கிறார் .அவங்க எனக்கும் போன் செய்து பணம் கேட்டாங்க .என்னிடம் இப்ப இல்லை ஒரு வாரம் சென்று தருகிறேன் என சொன்னேன் என்று சொல்லி இருக்கிறார் .இருவருக்கும் சிறிது சந்தேகம் .பள்ளிகூடத்துக்கு பணம் கட்டனும் என்று சொல்வது பொய்யாக இருக்குமோ என சந்தேகப்பட்டு அந்த பள்ளியில் போய் விசாரித்து இருக்கின்றார்கள் .அவங்க ஏற்க்கனவே எல்லா பணத்தையும் கட்டிமுடித்துவிட்டார்களே என பள்ளியில் சொன்னதும் இரண்டுபேரும் திரும்பிவிட்டனர் .இனிமேல்தான் இருவருக்கும் அதிர்ச்சி ஒன்று காத்து இருக்கு என்பது அறியாமலே வந்துவிட்டனர் .


முதல் நண்பர் அந்த பெண் பணம் கேட்டதை யார் என சொல்லாமல் நடந்த கதையை ஸ்டேட்டஸ் ஆக தனது முகப்பில் பதிந்து இருக்கின்றார் .அங்கே தான் நிறைய உண்மை வெளிச்சத்துக்கு வந்தது மியுட்சுவல் நண்பர்களாக உள்ள கிட்டத்தட்ட பதினைத்து பேர் இதே பெண்ணிடம் இருப்பத்து ஐந்தாயிரம் ருபாய் குழந்தை படிப்புக்காக கொடுத்துள்ளார்கள் .எல்லோரிடமும் ஒரே கதைதான் .கணவருக்கு தெரியாமல் போன் செய்கிறேன் என .மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இருக்கின்றார்கள் .கணவன் சொல்லிகொடுத்தபடி மனைவி பேசி பணம் வாங்கி இருக்கிறார் .ஸ்டேட்டஸ் பின்னூட்டத்தில் எல்லோரும் கொட்டி தீர்த்துவிட்டனர் .


சமூக ஊடகத்தில் சமூக அக்கறை உள்ளவனாக பதிவுகள் போட்டு நல்ல பெயரோடு இருக்கும் ஒருவர் தனது மனைவியின் மூலம் நாடகம் ஆடி நம்பிக்கைக்கு உரிய நண்பர்களிடம் மோசடி செய்ய எப்படி மனது வந்தது என தெரியவில்லை .இதை இங்கே எழுதிய காரணம் நம்மை நம்பிக்கைக்கு உள்ளாக்கி நம்மையே மோசடி செய்யவும் நண்பன் என்ற பெயரில் சிலர் கிளம்பி இருப்பதால் எழுதினேன் .எல்லோரிடமும் உங்கள் உண்மைகளை கொட்டி தீர்க்காதீர்கள்....


நன்றி - ஃபாரூக் மொஹம்மது 

No comments:

Post a Comment