This blog is all about my interest, belief,and what i want to do and what i love to do and share with you.,
Showing posts with label அறைகூவல். Show all posts
Showing posts with label அறைகூவல். Show all posts
Saturday, January 12, 2013
Wednesday, October 17, 2012
டெங்கு காய்ச்சலில் உயிர் தப்புவது எப்படி?
எலிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று உலகில் உருவெடுக்கும் புது புது காய்ச்சல்கள் அத்தனையும் நம்மை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இப்போது “டெங்கு” காய்ச்சல் மிரட்டுகிறது. லேசான உடல் வலி... கொஞ்சம் வெப்பம் உடலில் தெரிந்தாலே டெங்குவாக இருக்குமோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது.
டெங்குவை நினைத்து பீதி அடைவதை விட அதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக கொசுக்களால்தான் பல வியாதிகள் பரவுகிறது. ஆனால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் கடிக்கும் ஏடிஸ் ஏஜிப்டி என்ற வகையை சேர்ந்த இந்த கொசுக்கள் தென் கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.
டெங்கு வைரசில் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 அகிய 4 வகை வைரஸ்கள் உள்ளது. தண்ணீர் தேங்கும் பகுதிகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்கள், பாசன பகுதிகளில் ஈடிஸ் கொசுக்கள் உற்பத்தி தாராளமாக இருக்கும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் காய்ச்சல் திடீரென ஏற்பட்டு திடீரென உடல் வெப்பம் அதிகரிக்கும். தலைவலி, உடல்வலி, எலும்பு மூட்டுகளில் வலி இருக்கும்.
2 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்து கொண்டே இருக்கும். காய்ச்சல்தானே ஒரு மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் என்று நாமே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும்.
டெங்கு டைப்-1 பாதிப்பால் தொடர்ந்து ஒரு வாரம் காய்ச்சல் இருக்கும். வேறு பாதிப்புகள் இருக்காது. ஒரு முறை டெங்குவால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் இடை வெளியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் வந்தால் 2-ம் நிலையில் இருப்பவர்களாக கருதப்படுவார்கள். ரத்தம் உறைவதற்கு தேவையான ரத்த வட்டுகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும், வாய், மூக்கு பகுதிகளில் ரத்தம் வெளிவரும். இதில் நோய் முற்றியவர்கள் டைப்-3க்கு தள்ளப்படுகிறார்கள்.
இவர்களுக்கு ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த அழுத்தம், நாடி துடிப்பு குறையும். மயக்கம் ஏற்படும். உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் ஏற்படும். டைப்-2, டைப்-3 நிலையில் இருப்பவர்கள்தான் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். ஆனால் இப்போது முதல் நிலை பாதிப்பு மட்டுமே இருப்பதால் பீதி அடைய வேண்டியதில்லை. டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த:- வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோ சைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல். எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படும்.
கொசுக்கடியில் இருந்து காப்பதன் மூலம் டெங்கு வராமல் தடுக்கலாம். எனவே வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தொட்டிகள், குடங்களில் பல நாட்கள் தண்ணீரை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போதும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
நன்றி : மாலைமலர்

Thursday, July 26, 2012
எச்சரிக்கை
இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது , யாரேனும் உங்களை நோக்கி முட்டையை வீசினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம் . துடைப்பானையும் பாவிக்க வேண்டாம் .ஏனெனில் முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப் பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு . பின்பு நீங்கள் வாகனத்தை நிறுத்தி பணம் மற்றும் உடமைகளை பறிகொடுக்க நேரலாம் .சாலையோரத்தில் பணம் பறிப்பதற்கு குற்றவாளிகள் தற்போது இந்த வழியையே பின் பற்றுகின்றனர் . இது உங்களுக்கு உபயோகமாய் இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
IF YOU ARE DRIVING AT NIGHT AND EGGS ARE THROWN AT YOUR WINDSCREEN, DO NOT STOP TO CHECK THE CAR , DO NOT OPERATE THE WIPER AND DO NOT SPRAY ANY WATER, BECAUSE EGGS MIXED WITH WATER BECOME MILKY AND BLOCK YOUR VISION UP TO 92.5%, AND YOU ARE THEN FORCED TO STOP BESIDE THE ROAD AND BECOME A VICTIM OF THESE CRIMINALS. THIS IS A NEW TECHNIQUE USED BY GANGS, SO PLEASE INFORM YOUR FRIENDS AND RELATIVES.
விவசாயி
இவரது பெயர் ராமசாமியோ- குப்பு சாமியோ- கோவிந்த சாமியோ இருக்க கூடும்.. பெயரில் என்ன இருக்கிறது..?? விஷயத்திற்கு வருவோம்...
இவருக்கு வயது சுமார் எழுபத்தைந்து.. படிக்க வசதி இல்லாத காரணத்தால் தன்னுடைய தந்தை செய்த அந்த மானங்கெட்ட விவசாய பொழப்பை தேர்ந்தெடுத்தார் தன்னுடைய பதினான்கு வயதில்... இதோ உருண்டு ஓடி விட்டது அறுபதாண்டுகள்... இந்த அறுபதாண்டுகளில் இவர் இந்த நாட்டுக்கு என்ன கிழித்திருக்கிறார் தெரியுமா..????
தன்னுடைய ஒரு ஏக்கர் விவசாய நிலத்தின் மூலம் ஒரு போக விவசாயத்தின் மூலம் சுமார் 350 டன் நெல் உற்பத்தி செய்திருக்கிறார்... ( ஒரு போகத்திற்கு தண்ணீர் கிடைத்ததும், உரம் வாங்க கடன் வாங்குவதுமே பெரும் பாடாகி விட்டதால் இவரால் ஒரு போகத்திற்கு மேல் விளைவிக்க முடியவில்லை..) மேலும் அவ்வப்போது உளுந்து, எள் போன்ற தானியங்களை ஒரு குத்து மதிப்பாக சொன்னால் கூட 100 டன்கள் விளைவித்திருப்பார்..
சுமார் 400 தங்கள் தாவர, மிருக கழிவுகளை ரீசைக்கிள் செய்து உபயோகித்திருக்கிறார்... வீட்டு வரி, தண்ணி வரி, வாய்தாவரி என்ற வகையில் இந்த நாட்டுக்கு இவர் கட்டிய வரிகளில் இவர் ஒரு மாடி வீட்டை கட்டி இருக்க முடியும்.. ஆனாலும் அவைகளை இவர் ஒழுங்காக கட்டிய பாவத்தால் ஒவ்வொரு மழை காலத்திலும் ஒழுகும் கூரையை கூட நேரத்திற்கு மாற்ற முடிந்ததில்லை...
இவரது தலையில் கட்டி இருக்கும் உருமா முழுதாய் இருக்கும் வரை இடுப்பில் வேட்டி என்ற பெயரில் இருக்கும்... அதுவே கந்தலாகி போனால் நீள நீளமாய் கிழிக்கப்பட்டு கோவணமாய் அவதாரமெடுக்கும்... ஆனால் நிச்சயம் அந்த கோவணத்தில் "இந்தியா" என்றோ.."சஹாரா.." :கிங் பிஷர்" என்றோ எழுதி இருக்காது...திருமணத்தின் போது கடனை வாங்கி தன்னுடைய மனைவி கழுத்தில் கட்டிய கால்பவுன் தங்கமும் அடகுக்கு போய் மூழ்கிவிட்டதால் மஞ்சள் கூட இழந்த கயிறு வெள்ளையாய் இளிக்கிறது... இவரது பாதுகாப்புக்கு ஒரு ரப்பர் செருப்பு கூட கிடைத்ததில்லை... இந்த பாவியை பற்றி பேசி நம் நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும்..??
நமக்கு வேறு வேலை இருக்கிறது.. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வாங்கி கொடுத்து அவரை மந்திரியாக்கி அழகு பார்க்க வேண்டும்.. அவரல்லவா இந்த நாட்டிற்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்திருக்கிறார்..???
நன்றி - kblotry
Saturday, June 30, 2012
Subscribe to:
Posts (Atom)