பக்கங்கள்

Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Tuesday, July 31, 2012

ஆதித் தமிழனின் அறிவு

Tamilnadu Temple

ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் " எடுத்தோம், கவிழ்த்தோம் " என்று செய்ததில்லை, தான் செய்து வைத்து விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும், " அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான்.ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால் " கடவுள் " பெயரை சொல்லிவிட்டு சென்றது தான்,ஒருவேளை அவன் கடவுள் பெயரை கூறினாலாவது பயந்து கொண்டு அந்த விடயங்களை கடைபிடிப்பார்கள் என்ற தொலை நோக்கு பார்வையாக கூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது, வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக்கெல்லாம் கோயில் எழுப்பி,தான் பெரிதாக நினைத்த கடவுளையே கூட இழிவு படுத்துவர் என்று.


இன்றைக்கு பகுத்தறிவு என்ற பெயரில், நம் முன்னோர்களின் பல அறிய கண்டுபிடுப்புகளை நாளுக்கு நாள் நாம் அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் கூற வேண்டும்,கோவிலுக்கு செல்ல கூடாது,சாமியும் இல்லை,பூதமும் இல்லை, என்ற வாதம் தான் இன்றைய பகுத்தறிவின் வெளிப்பாடாக இருக்கின்றது.அது உண்மையா,பொய்யா என்பது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது.ஆனால் நாளடைவில் அந்த விடயம் பலரால்,பலவிதமாக திரித்து இன்று நம் அடையாளங்களை இழக்கும் நிலைக்கு வந்து விட்டோம் என்பதே உண்மை.


கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?உதாரணத்திற்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் நல்லது, என்பதற்கு பின்னால் கடவுளின் பெயரை கூறியதால் இன்று நாத்திகர்கள் அதை செய்வது இல்லை, ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல், முழு நிலவு அன்று நிலாவிலிருந்து வரும் ஒளிக்கதிரில் உள்ள ஒருவித " பாசிடிவ் எனர்ஜி " நாம் சுற்றிவரும் மலையின் மீது பட்டு,நம் உடலில் இறங்கினால் நல்லது என அதையே தான் இன்று விஞ்ஜானம் கூறுகின்றது.


இன்றைக்கு இருப்பதை போன்று கேளிக்கைகளுக்கு திரை அரங்குகளோ,கல்வி கற்பதற்கு "ஏரிகளின்" மேல் கல்லூரிகளோ, மருத்துவமனைகளோ அவர்கள் கட்டிவைக்க வில்லை, இவை அனைத்தும் நடந்தது ஓரே இடத்தில், ஒரு இடத்திற்கு சென்றால் அனைத்தையும் கற்க முடியும் என்றால் ( களவி உட்பட ) அது அன்று கோவில்களாக மட்டுமே இருந்துள்ளது, அது ஒரு பல்கலைக்கழமாகவே இருந்துள்ளது , அதனால் தான் கோவில் சிற்பங்களில் களவி சம்மந்தப்பட்ட சிற்ப்பங்கள் கூட காண நேர்கின்றது," கோவில்களில் கேளிக்கைகளுக்கு நாட்டியங்கள் அரங்கேறியுள்ளது, கல்வி கற்க பாட சாலைகள் அமைக்கப்பட்டது.


சில கோவில்கள் மருத்துவமனைகளாகவும் செயல்பட்டுள்ளது ,உதாரணத்திற்கு திருச்சி, திருவைகுண்டத்தை கூட கூறலாம் அங்கே ஆயிரம் வருடங்களுக்கு முன்னே,வெறும் மூலிகைகளை வைத்து "......." சர்ஜரி வரை நடைபெற்றுள்ளது. இன்றைக்கு இருப்பதை போன்று அன்று அனைவரும் மாடி வீடுகளில் தங்கி இருக்க வாய்ப்பில்லை ஆக பெரு வெள்ளம் வரும் போது, பெரும் பாறைகளால், பெரும் உழைபிற்கு மத்தியில் உருவான இந்த கோயில்களில் மட்டுமே மக்கள் தஞ்சம் அடைந்திருக்க கூடும் , கோவில் தூண்களில் தான் நம் கலைகளை வளர்த்துள்ளோம், அங்கே ஒவ்வொரு சிற்பமும் சொல்லும் கதை தான், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்.ஆயிரம் வருடங்களுக்கு மேல் நம்முடம் பயணிக்கும் கோயில்கள் அமைந்திருக்கும் இடம் சாதாரமாக தேர்வு செய்து கட்டி இருக்க வாய்புகள் இருக்காது.அந்த இடமானது பூமத்திய ரேகை கோட்பாடுகளின் படி அறிவியல் அமைப்புகளுடன் மட்டுமே கட்டப்பட்டிருக்கும், இன்றைக்கு இருக்கும் நிலப் பதிவு அலுவலகம் அன்று கிடையாது,கோவில் கல்வெட்டுகள் முழுவதும் தான் அது பதியப்பட்டுள்ளது,அந்த கல்வெட்டுகளில் தான் தமிழனின் வரலாறு புதைந்துள்ளது.


தஞ்சை பெரிய கோயில் கட்டியது " ராஜ ராஜன் " என்று ஹார்ட் டிஸ்கிலோ, பென்ட்ரைவிலோ பதியப்படவில்லை, அனைத்தும் கோயில் கல்வெட்டுகள் மூலமே நமக்கு தெரிய வருகின்றது, அப்படி இருக்க பகுத்தறிவின் பெயரில் இப்பேற்பட்ட நம் வரலாற்று சின்னங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று யோசித்து பாருங்கள் ! வரலாற்று அடையாளங்கள் வேண்டாம் ,மொழி மட்டும் போதும் என்பவர்கள் ,மரங்கள் வேண்டாம் ஆக்சிஜன் மட்டும் போதும் என்று முரண்பாடான கருத்தை கூறுவதைப் போன்றது என்பதை உணரவேண்டும்.


ஐயாயிரம் வருடத்திற்கு முன்பே தமிழன் சித்த வைத்தியத்தில் கூறிய மஞ்சளுக்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான்,வீட்டு முற்றத்தில் தமிழன் வளர்த்த வேப்பமரத்திற்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், இன்னும் எதை எல்லாம் தொலைக்கைப்போகிறோம் ? மொழி கலப்படமாகிவிட்டது, உடை மேற்கத்திய உடை, கலப்படம் இல்லாமல் பழமையுடன் காட்சியளிப்பதும், நாம் பழமையானவர்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிப்பதும்,இந்த கோயில்களை வைத்து மட்டுமே என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்? அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச்செல்லவிருக்கிறோம்?


தொலைத்தது வரை போதும், மீதம் உள்ளவயேனும் காப்பாற்றுவோம்.வரலாற்று சின்னங்களான நம் கோவில்களை காப்போம்.அந்த சிலைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளை உலகறிய செய்வோம் !தமிழை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வோம்.!!!


நன்றி: நண்பர் சசிதரன் 

Thursday, July 26, 2012

காமராஜர்


இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்...


“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். 
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார். 


ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....


அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார். 


என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.


மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து 
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார். 


மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல்ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....


அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் 
என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.


முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. நான் 
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார். 


மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. 
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது 
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...


அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம். 


மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.


ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....


நன்றி - ஏகலைவன். பா 

Saturday, July 21, 2012

தாய்மை மகத்தானது


கேன்சர் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள மகளுக்கு தாழ்வு மனப்பான்மை போக்க
தனது தலையையே மொட்டை அடித்து கொண்டபாராட்ட பட வேண்டிய தாய்,,

தாய்மை இவ்வுலகிலேயே மகத்தானது !

Thursday, July 19, 2012

இரண்டு ரூபாய் மருத்துவர் சந்திரவதனன்

படத்தில் தோன்றும் நபரின் பெயர் சந்திரவதனன். ஊர் ஜோலார் பேட்டை. MBBS பட்டம் பெற்ற மருத்துவர்.


1963-ல் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற நாள் முதல் இன்று வரை சைக்கிளில் கிராமம் கிராமமாக நோயாளி களை தேடிச்சென்று சிகிச்சை அளி த்து வருகிறாராம்.

சொந்தமாக கிளினிக் இல்லை, மருந்துக்கடை இல்லை, தேவையில்லாத டெஸ்டுகளும், ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க சொல்லுவதில்லை, ஸ்கேன் கம்பெனிகளிடம் இருந்து கமிஷன் வாங்குவதில்லை, கிராமங்களுக்கு மக்களை நாடி இவர் பயணிப்பதும் மிதி வண்டியில் தான், இத்தகு எளிமையான, சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சந்திர வதனன் வாங்கும் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா?



 வெறும் இரண்டு ரூபாய்தான்.

இவர் ஆயிரத்தில் ஒருவர் அல்ல, கோடியில் ஒருவர், இந்த கமிஷன் உலகத்திலும் மருத்துவ தொழிலை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வரும் மருத்துவர் திரு. சந்திரவதனனுக்கு பெருமையுடன் ஒரு சல்யூட் அடிப்போம்.

Saturday, June 16, 2012

பித்தன்

கல் சிலைக்கு ஊற்றும் பாலை

ஒரு ஏழை குழந்தைக்கு ஊற்று ,

கடவுள் உனக்கு கடன் படுவான் !





-படித்ததில் பிடித்தது (முகநூல்)