பக்கங்கள்

Thursday, November 8, 2012

சூரிய ஒளி மின் உற்பத்தி

சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜெர்மன் உலக சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் ஆகும்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின் ஜெர்மன் தனது அணு மின் திட்டத்தை கைவிட்டு, வேறொரு எரிசக்திக்கு மாறி உள்ளது.

இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜெர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது.

இந்தாண்டு ஜெர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது.

இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்‌கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்)


இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ‌ஜெர்மன் சாதனை படைத்துள்ளது

Wednesday, October 17, 2012

டெங்கு காய்ச்சலில் உயிர் தப்புவது எப்படி?

எலிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று உலகில் உருவெடுக்கும் புது புது காய்ச்சல்கள் அத்தனையும் நம்மை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இப்போது “டெங்கு” காய்ச்சல் மிரட்டுகிறது. லேசான உடல் வலி... கொஞ்சம் வெப்பம் உடலில் தெரிந்தாலே டெங்குவாக இருக்குமோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது. 

டெங்குவை நினைத்து பீதி அடைவதை விட அதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக கொசுக்களால்தான் பல வியாதிகள் பரவுகிறது. ஆனால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் கடிக்கும் ஏடிஸ் ஏஜிப்டி என்ற வகையை சேர்ந்த இந்த கொசுக்கள் தென் கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. 

டெங்கு வைரசில் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 அகிய 4 வகை வைரஸ்கள் உள்ளது. தண்ணீர் தேங்கும் பகுதிகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்கள், பாசன பகுதிகளில் ஈடிஸ் கொசுக்கள் உற்பத்தி தாராளமாக இருக்கும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் காய்ச்சல் திடீரென ஏற்பட்டு திடீரென உடல் வெப்பம் அதிகரிக்கும். தலைவலி, உடல்வலி, எலும்பு மூட்டுகளில் வலி இருக்கும். 

2 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்து கொண்டே இருக்கும். காய்ச்சல்தானே ஒரு மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் என்று நாமே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். 

டெங்கு டைப்-1 பாதிப்பால் தொடர்ந்து ஒரு வாரம் காய்ச்சல் இருக்கும். வேறு பாதிப்புகள் இருக்காது. ஒரு முறை டெங்குவால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் இடை வெளியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் வந்தால் 2-ம் நிலையில் இருப்பவர்களாக கருதப்படுவார்கள். ரத்தம் உறைவதற்கு தேவையான ரத்த வட்டுகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும், வாய், மூக்கு பகுதிகளில் ரத்தம் வெளிவரும். இதில் நோய் முற்றியவர்கள் டைப்-3க்கு தள்ளப்படுகிறார்கள். 

இவர்களுக்கு ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த அழுத்தம், நாடி துடிப்பு குறையும். மயக்கம் ஏற்படும். உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் ஏற்படும். டைப்-2, டைப்-3 நிலையில் இருப்பவர்கள்தான் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். ஆனால் இப்போது முதல் நிலை பாதிப்பு மட்டுமே இருப்பதால் பீதி அடைய வேண்டியதில்லை. டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த:- வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோ சைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல். எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படும். 

கொசுக்கடியில் இருந்து காப்பதன் மூலம் டெங்கு வராமல் தடுக்கலாம். எனவே வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தொட்டிகள், குடங்களில் பல நாட்கள் தண்ணீரை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போதும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

நன்றி : மாலைமலர் 

Tuesday, August 14, 2012

மனிதருள் மாணிக்கம் - ஜாதவ் பயேங்

யார் இந்த மாமனிதர் ?!

'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .


1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.


2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.


குடும்பம்

 
மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.
மரங்கள் மட்டும் அல்ல

தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.
இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!


'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்...நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...

Thursday, August 9, 2012

தமிழகத்தின் முதன்மையானவை

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

Sunday, August 5, 2012

எச்சரிக்கை


எச்சரிக்கை!!! RED ALERT: WARNING.!!!


அனைவரும் கவனமாக இந்த கட்டுரையை படிக்கவும்.


நமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!.... கவனமாக இருக்கவும்!.


நீங்கள் பன்னாட்டு விமானத்தில் பயணம் செய்பவராக இருந்தால் பன்னாட்டு விமான நிலைய குடிபுகல்அதிகாரி (IMMIGRATION OFFICER) /சுங்க அதிகாரி (CUSTOMS OFFICER) /காவல்துறை அதிகாரி (POLICE OFFICER) மற்றும் விமான நிலைய ஊழியர் (AIRPORT STAFF) யாரிடம் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) கொடுத்தாலும் மிக கவனமாக இருக்கவும் ஏனென்றால் இந்த ஊழியர்கள் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) மிகச் சுலபமாக திருத்தி உங்களை இதன் மூலம் அலைக்கழித்து பணம் பறிக்கும் வழியை கையாளுகின்றனர் இது அனைத்து பன்னாட்டு விமான நிலையத்திலும் கூட்டு சதியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.


விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு (DEPATURE) நேரத்தில், பயணி குடிபுகல் (IMMIGRATION OFFICER) அதிகாரியை கவனிக்காமல் இருக்கும் தருணத்தில் வெளியேற்றம் (EXIT) முத்திரை பதித்து இலாவகமாக உங்களது கடவுச்சீட்டின் ஒரு பக்கத்தை கிழித்து விட்டு அனுப்பிவிடுகின்றார். மேலும் பயணி குடிபுகல்/குடியேற்றல் மேசையைவிட்டு அகன்றதும் தனது கணினிமூலம் பயணியின் முழு விவரத்துடன் புகார் தெரிவித்து விடுகின்றார், இப்பொழுது இந்தியாவின் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் குடிபுகல்/குடியேற்றல் அலுவலர் கணினியில் பயணிகளின் கடவுச்சீட்டின் என்னை தட்டினால் பயணிகளின் முழு விவரப் பட்டியல் கிடைக்கும் அதில் சிகப்பு கொடி அடையாளமிட்டு மிளிரும். இதுபோன்று பயணிகளிடம் பணம் பறிக்கும் உத்தியை கையாளுகின்றனர்.


அந்த பயணி மீண்டும் வருகைத் தரும்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.


அந்த பயணி வெளிநாட்டில் எத்தனை ஆண்டு வேலைசெய்தார், அவரது வருமானம், அவர் செய்யும் வேலை போன்றவைகள் விசாரிக்கப்படும், இதில் சட்டம் பேசும் அப்பாவிகள் , இந்தியாவில் உண்மையான நீதி கிடைக்கும் என நம்பும் அப்பாவிகள் நிலைதான் பரிதாபம் அவரின் எதிர்காலம் பாழ்படுத்தப்படும். இதற்காக அவரிடம் குடிபுகல் அதிகாரிகளும், காவலர்களும் பேரம் பேசி பணத்தை கறந்துவிடுவார்கள்.


தயவு செய்து அனைவருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள் உங்களது கடவுச்சீட்டை விமான நிலைய குடிபுகல்/ சுங்கம் மேசையில் உள்ள அலுவலரிடம் கொடுக்கும்போது மிகவும் விழிப்புடன் இருங்கள், உங்களது பார்வையை திசைத்திருப்பும் நோக்கத்தில் அந்த அலுவலர் நடந்து கொண்டாலும் உங்களது பார்வையை தவறவிடாதீர்கள்.


மேலும் இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளிடம் தெரிவியுங்கள். இதுபோன்று இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 20 - 30 சம்பவங்கள் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா ஜித்தா (சவுதி அராம்கோ) வில் வேலைபார்க்கக் கூடிய ஹைதராபாத் சகோ. ஆரிபுதீன் தனது குடும்பம்பத்தினர் ஆறு உறுப்பினர்களுடன் அமெரிக்கா செல்ல விசா கிடைத்து நமது நாட்டின் ஹைதராபாத் வழியாக செல்ல எண்ணி ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்து, ஒருமாத காலம் தங்கிவிட்டு மீண்டும் ஹைதராபாத் விமான நிலையம் வழியாக அமேரிக்கா சென்றிருக்கின்றார். அவர் அமெரிக்காவை அடைந்து குடிபுகல் செய்யும்போது அவர் மனைவியின் கடவுச்சீட்டில் அமெரிக்காவிற்கான விசா பக்கம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கிருந்து அவர்கள் அனைவரும் திருப்பிவிடப்பட்டனர். அவர்கள் மும்பை வந்தடைந்தவுடன் மும்பை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர், கடந்த இரண்டு மாதகாலமாக கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும், குடிபுகல் அலுவலகத்திற்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர். நினைத்துப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கின்றது எவ்வாறெல்லாம் குடிபுகல் அதிகாரிகள் பணம் பறிப்பதற்காக தன தாய்நாட்டு மக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றார்கள் என்பது.
பாம்பே மற்றும் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தின் மூலம் பயணிக்கும் அனைத்து பயணிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் ௨௦-௩௦ இதுபோன்ற பாஸ்போர்ட்டின் நடு பக்கங்கள் கிழிக்கப்படும் நிகழ்வுகள் மேற்கூறிய விமான நிலையங்களில் நடைபெறுவதாகவும், இதில் சிலருக்கு இந்த சம்பவம் யாரால், எப்பொழுது நடைபெற்றது என்பதே கூட தெரிவதில்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்துபாருங்கள், நமது நாட்டின் காவல்நிளையங்களும், வழக்கடுமன்றங்களும் நம்மை அலைகளிப்பர்கள் என்பதை. இதுபோன்ற சம்பவங்கள் இரண்டு மூன்று வருடங்களாகவே அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. யார் இதுபோன்ற கடவுச்சீட்டு வைத்திருக்கின்றார்களோ அவர்கள் விமான நிலையத்தை அடைந்தவுடன் அவர்களிடம் விசாரணை என்னும் ரீதியில் அவர்களை அளயவிடுகின்றனர், இதுபோன்ற சம்பவங்களை செய்வது சில குடிபுகல் அதிகாரிகள்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆகையால் நாம் அனைவரும் மிகவும் கவனமாக நமது கடவுச்சீட்டை சரிபார்த்துவிட்டு குடிபுகல் மேசையிலிருந்து அகலவேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த செய்தியை நாம் அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும். 

தங்கமங்கை - ருதே மெலுயுத்தி


12 வருட பண்ணை வாழ்க்கை இங்கிலாந்தில் உணவகம் நடத்தும் தனது சிற்றன்னைக்கு துணையாக லித்துவேனியாவில் இருந்து 2010 ல் லண்டன் வந்தார், அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படிக்கும் போது நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்வார், தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வந்தது. பள்ளியில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது பெயரை கொடுங்கள் என அறிக்கை வந்தது. நானும் கலந்துகொள்ள போகிறேன் என்றார். பள்ளி நிர்வாகம் கூறியவார்த்தை 'அது ஸ்கூல் ஸ்விம்மிங்ஃபூல் இல்லை. லண்டன் ஒலிம்பிக் மைதானம் உலகின் டாப் விரங்கனைகள் வருவார்கள்' என்று பயமுறுத்தி கிண்டலடித்தது. ஆனால் அந்த 15 வயது சிறுமி கூறியது, "நான் தங்கபதக்கம் வாங்குவேன்" பள்ளி நிர்வாகமும் சரி உன் ஆசையை ஏன் கெடுப்பானேன் என்று அனுப்பியது. 


தனக்கு பயிற்சியாளராக இருந்த ஜரிஸ் விராங்கனையை 5 இடத்திற்கு தள்ளினார், கடந்தவருடம் தங்கம் வாங்கிய சீன விராங்கனையை 3ம் இடத்திலும், வெள்ளி வாங்கிய யுஎஸ் மங்கையை 2ம் இடத்தில் தள்ளி தங்கம் வாங்கினார். 15 வயது நிறம்பிய லித்துவேணிய தங்கமங்கை "ருதே மெலுயுத்தி" நமக்கு சொல்லும் பாடம் "எண்ணத்தை உறுதியாக்குங்கள் மற்றவை எல்லாம் உங்களை தேடிவரும்"

Wednesday, August 1, 2012

தமிழ் மொழியின் சிறப்புகள்

Tamil

1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்


2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்


3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்


4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்


5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்


6) அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்


7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)


8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது


9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)


10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.


11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)


12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்


13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)


14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்


15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்


16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்


17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்


18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்


19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது


20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)


21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்


22) தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்


23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது


24) தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்


25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்


26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது


27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்


28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்


29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)


30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்


31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது


32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது


33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது


34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது


35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)


36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்


37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)


38) வளர்தமிழ்:- காலந்தோறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ் 



நன்றி - பிரேம லதா